Skip to main content

நானும் என் பள்ளியும்.....

நான் படித்தது (படித்து கிழித்து) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மங்களநாடு. இந்த பள்ளி என் வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் இருக்கிறது.இந்த பதிவை எழுதும் போது என் இளமை காலம் என் கண் முன்னே வந்து செல்கிறது.நான் பள்ளிக்கு வெகு காலம் நடந்தே சென்றவன் அதனால் காலை எட்டு மணிக்கு எல்லாம் அயத்தம் ஆகிவிடுவேன்.அப்பொழுது என் அம்மா தான் என்னை பள்ளிக்கு கிளப்புவார்கள். அந்த சின்ன வயதில் என் அம்மா தலைவாருவதை என்னால் இன்றும் மறக்க முடியாது.இது மாதிரி எப்பவும் சீவனும் என்று சொல்வது என் மனதில் பசுமரத்து ஆணிபோல் பதிந்து போனது அதனால் தான் இன்றளவும் நான் தலைவருவதை அதே பாணியில்(style) தொடர்கிறேன் அம்மாவின் விருபத்திற்காக. இன்றளவும் வேறு மாதிரி தலைவருவாருவது (சீவியது) கிடையாது என் தலையை. இன்று நினைத்தாலும் எனக்கு சிரிப்பு தான் வருது அந்த பள்ளி காலங்கள்.ஆம் நான் பள்ளி செல்லும் காலத்தில் மாங்காய்,புளியங்காய்,நாவல் பழம், கொடுக்கபிலி என்று எதாவது ஓன்று   எங்கள் பைகளில் கண்டிப்பாக வந்து சேர்ந்துவிடும். இல்லை என்றாலும் சேர்த்துவிடுவார்கள் நண்பர்கள்.பள்ளியில் படிப்பதை தவிர அத்தனை சேட்டையும் செய்தோம் என்று தான் சொல்ல வேண்டும்.அது கிராமம் சேர்ந்த பள்ளி என்பதால் எங்கள் பள்ளியில் தோட்டம் இருந்தது அதன் வேலைகள் எல்லாம் மாணவர்கள் நாங்கள்தான் செய்வோம். வெண்டைக்காய் பயிர் செய்வது அல்லது கத்தரிக்காய் பயிர் செய்வது என்று எங்கள் காலம் சதா அதிலேயே சென்றது எனலாம்.காய்கறிகள் எல்லாம் எங்களுக்கே சமைக்கப்படும் என்பதுதான் இதில் இன்னும் ஒரு மகிழ்ச்சி.இன்று போல் எங்களுக்கு எல்லாம் முதுகில் சுமைதுக்கும் பள்ளி புத்த பைகள் இருந்தது இல்லை.பொதுவாக எல்லோருக்கும் மஞ்ச பை  அல்லது சந்தையில் காய்கறி வாங்க பயன்படும் நரம்பு பை இதையும் மிஞ்சி போனால் ஒயர் பை,அதில் ஒரு தட்டு மற்றும் ஒரு பிஞ்சிபோன வாய்பாடு மற்றும் எழுத முடியாத அளவுக்கு உள்ள சிலேடு மற்றும் குச்சி. இதுதான் எங்கள் காலம் ஆனால் இன்று மாதிரி வீட்டு பாடங்களும் எங்களுக்கு அந்த அளவுக்கு இல்லை என்றாலும் எதாவது கொடுப்பார்கள் அதை சிலேட்டில் எழுதி அது அழியாமல் பாதுகாப்பது எங்களுக்கு பெரிய வேலை.சில நேரங்களில் எப்படி பாதுகாத்தாலும் அழிந்து போகும் என்பது வேறு விஷயம்.பள்ளியின் மதிய உணவு எங்களுக்கு தேனமிர்தம் (பூச்சி உள்ள).காலில் செருப்பு இல்லாமல் நடந்த காலம் (எத்தனை செருப்பு வாங்கி கொடுத்தாலும் தொலைத்து விடுவது வேறு விஷயம்). எந்த செருப்பை எந்த காலில் மாட்டுவது தெரியாமல் முழித்த காலம். இப்போது படுக்கையில் இருந்து இறங்குபோதே செருப்பு போடுவது பழக்கமா போச்சு.எங்களுக்கு கொடுக்கப்படும் சத்து மாவு உருண்டை இன்றளவும் மறக்க முடியாது.அப்பொழுது போட்ட சிறு சிறு சண்டை கூட இப்பொழுதும் என் நினைவில் இருக்கிறது. இப்பொது அந்த வழியாக செல்லும் போது மனது ஏங்குகிறது அந்த காலத்திற்காக, ஆம் எந்த கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாய் சுற்றி திரிந்த காலம். இப்போது அந்த காலம் கிடைக்குமா?  

Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மறுபடியும்

அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம்............... என்னால் இது நாள் வரை வலைப்பதிவு வந்து எழுத முடியவில்லை ஆனால் வந்து படிப்பது மட்டும் உண்டு.இன்று முதல் நான் என் வலை பக்கத்தில் எழுதலாம் என்று உத்தேசத்தில் உள்ளேன்.....என் வலைபக்கத்திற்கு உங்களின் ஆதரவை கொடுக்க வேண்டிகொள்கிறேன் இப்படிக்கு, அம்பாள்புரம் செந்தில்

எல்லா சாமியும் ஒன்னுதான்.....

நேற்று ஒரு செய்தியை முகநூலில் படிக்க நேர்ந்தது. ஒரு இந்து மாணவனை மதம் மாறசொல்லியதகவும் அவர் மாற மறுத்ததா காரணத்தால் அவனுக்கு நாக்கு அறுக்கபட்டதகவும் அந்த செய்தி இருந்தது அதற்கு பின்னுட்டங்களை பார்க்கும் பொது என் மனம் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தது. ஆம் அதற்கு பின்னுட்டம் போட்டவர்கள் அனைவரும் இந்து வெறியர்களா தான் இருக்க வேண்டும் அத்தனை கோபம் தெரிந்தது அதில்.கோபம் சரியானதுதான்.ஆனால் அதற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குறை சொல்வது எந்த விதத்தில் சரி. இதை எழுதும் நன் ஒரு இந்து என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.இங்கே தனிப்பட்ட முறையில் சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்.நான் ஒரு இந்து ஆனால் நான் படித்தது ஒரு கிறிஸ்தவ பள்ளிகூடத்தில் அதனால் எனக்கு பைபிள் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நன் நன்றாகவே கிறிஸ்தவ மதத்தை பற்றி தெரிந்தவன்.அதே போல் குரான் படிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை என்றலும் முஸ்லிம் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு அதிகமாகவே கிடைத்தது என்றே சொல்லலாம்.அவற்றில் ஒரு நட்பை மட்டும் இங்கு உதரணத்துக்கு சொல்ல கடமைப்பட்டு இருக்குறேன்.அவரின் பெயர் முகமது அகில் இம்ரான். அவர...

எனக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு.........

நான் வேலை பார்க்கும் ஹோட்டல் நட்சத்திர அந்தஸ்து பெற்றதால் அங்கு புத்தாண்டை கொண்டாட வரும் நபர்களை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. பணம் படைத்தவரின் கூட்டத்திற்கு அளவே இல்லை,அதேபோல் அவர்கள் செய்யும் அலும்புக்கும் குறைவிருக்காது.இளம் ஆண்களும்,இளம் பெண்களும் குடிபோதையில் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் அவர்கள் செய்த சேட்டையெல்லாம் இங்க சொல்லவே எனக்கு கஷ்டமா இருக்கு. இது மட்டும் இல்லை கர்ப்பணி பெண்களும் குடிபோதையில் ஆடியதை பார்க்கும் போது “கலிகாலம்” என்று என் பக்கத்து வீட்டு பாட்டி சொல்லுவதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.சரி இங்குதான் இப்படி வெளியில் போய் நிப்போம் என்று வெளியே வந்தேன்,அங்கே நடந்தது அதைவிட கொடுமை.அங்கு ஒரு போலீஸ்  குடித்துவிட்டு கூச்சல் போட்டு கொண்டு சாலையில் போகும் ஆண்களை எல்லாம் அடித்து விரட்டி கொண்டு இருந்தார்,அப்போது மூன்று இளம் பெண்கள்,ஒருவர் வண்டியை ஓட்டும் போது பின்னல் அமர்ந்து இருந்த இரண்டு பெண்களும் ஓடும் வண்டியில் எழுந்து நின்று(போலீஸ் மாமாவுக்கு ஒரு ஓ போடுங்க அப்படின்னுதான்) கூச்சல் போட்டவன்னம் கடந்து சென்றனர். அந்த போலீஸ்காரர் தலையில் அடித்துகொண்டர். அப...