நான் வேலை பார்க்கும் ஹோட்டல் நட்சத்திர அந்தஸ்து பெற்றதால் அங்கு புத்தாண்டை கொண்டாட வரும் நபர்களை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. பணம் படைத்தவரின் கூட்டத்திற்கு அளவே இல்லை,அதேபோல் அவர்கள் செய்யும் அலும்புக்கும் குறைவிருக்காது.இளம் ஆண்களும்,இளம் பெண்களும் குடிபோதையில் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் அவர்கள் செய்த சேட்டையெல்லாம் இங்க சொல்லவே எனக்கு கஷ்டமா இருக்கு. இது மட்டும் இல்லை கர்ப்பணி பெண்களும் குடிபோதையில் ஆடியதை பார்க்கும் போது “கலிகாலம்” என்று என் பக்கத்து வீட்டு பாட்டி சொல்லுவதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.சரி இங்குதான் இப்படி வெளியில் போய் நிப்போம் என்று வெளியே வந்தேன்,அங்கே நடந்தது அதைவிட கொடுமை.அங்கு ஒரு போலீஸ் குடித்துவிட்டு கூச்சல் போட்டு கொண்டு சாலையில் போகும் ஆண்களை எல்லாம் அடித்து விரட்டி கொண்டு இருந்தார்,அப்போது மூன்று இளம் பெண்கள்,ஒருவர் வண்டியை ஓட்டும் போது பின்னல் அமர்ந்து இருந்த இரண்டு பெண்களும் ஓடும் வண்டியில் எழுந்து நின்று(போலீஸ் மாமாவுக்கு ஒரு ஓ போடுங்க அப்படின்னுதான்) கூச்சல் போட்டவன்னம் கடந்து சென்றனர். அந்த போலீஸ்காரர் தலையில் அடித்துகொண்டர். அப்போது அந்த பெண்கள் சொன்ன வார்த்தை தான் அவரை அப்டி தலையில் அடித்துக்கொள்ள செய்தது...........அயோ நான் சொல்ல வந்த விஷத்தை விட்டு விட்டு ஏதோ சொல்லிக்கொண்டு இருக்குறேன். சரி விசயத்துக்கு வாறேன்,புத்தாண்டு பிறந்த நேரம்,எல்லோரும் கூச்சலிட்டு கொண்டுஇருந்தனர்.நான் எல்லோருக்கும் இனிப்பு வழங்கி என் வாழ்த்தை சொல்லிக்கொண்டு இருந்த நேரம்,அப்போது ஒரு பிஞ்சு குழந்தை இனிப்பை வாங்கி கொண்டு,அன்பாக ஒரு முத்தத்தை எனக்கு புத்தாண்டு பரிசாக கொடுத்தது. இது தான் எனக்கு கிடைச்ச புத்தாண்டு பரிசு எனக்கு இந்த வருடம்......உங்களுக்கு?
அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம்............... என்னால் இது நாள் வரை வலைப்பதிவு வந்து எழுத முடியவில்லை ஆனால் வந்து படிப்பது மட்டும் உண்டு.இன்று முதல் நான் என் வலை பக்கத்தில் எழுதலாம் என்று உத்தேசத்தில் உள்ளேன்.....என் வலைபக்கத்திற்கு உங்களின் ஆதரவை கொடுக்க வேண்டிகொள்கிறேன் இப்படிக்கு, அம்பாள்புரம் செந்தில்
Comments
Post a Comment