Skip to main content

எல்லா சாமியும் ஒன்னுதான்.....




நேற்று ஒரு செய்தியை முகநூலில் படிக்க நேர்ந்தது.
ஒரு இந்து மாணவனை மதம் மாறசொல்லியதகவும் அவர் மாற மறுத்ததா காரணத்தால் அவனுக்கு நாக்கு அறுக்கபட்டதகவும் அந்த செய்தி இருந்தது அதற்கு பின்னுட்டங்களை பார்க்கும் பொது என் மனம் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தது. ஆம் அதற்கு பின்னுட்டம் போட்டவர்கள் அனைவரும் இந்து வெறியர்களா தான் இருக்க வேண்டும் அத்தனை கோபம் தெரிந்தது அதில்.கோபம் சரியானதுதான்.ஆனால் அதற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குறை சொல்வது எந்த விதத்தில் சரி. இதை எழுதும் நன் ஒரு இந்து என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.இங்கே தனிப்பட்ட முறையில் சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்.நான் ஒரு இந்து ஆனால் நான் படித்தது ஒரு கிறிஸ்தவ பள்ளிகூடத்தில் அதனால் எனக்கு பைபிள் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நன் நன்றாகவே கிறிஸ்தவ மதத்தை பற்றி தெரிந்தவன்.அதே போல் குரான் படிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை என்றலும் முஸ்லிம் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு அதிகமாகவே கிடைத்தது என்றே சொல்லலாம்.அவற்றில் ஒரு நட்பை மட்டும் இங்கு உதரணத்துக்கு சொல்ல கடமைப்பட்டு இருக்குறேன்.அவரின் பெயர் முகமது அகில் இம்ரான். அவர் என்னை விட வயது கொஞ்சம் குறைவு அதனால் தம்பி அல்லது ட போட்டு தன் கூப்பிடுவேன். ஒரு முறை கோவையில் உள்ள மருதமலை கோவிலுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது அப்பொழுது அவனும் வருவதாக சொன்னான் நானும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டேன். போன பிறகுதான் எனக்கு பொறிதட்டியது அவன் கோவிலுக்கு வரமாட்டனே நம் யோசிக்காமல் கூட்டிக்கொண்டு வந்துட்டோமே என்று. கோவிலுக்கு போனஉடன் அவனை என்னடா இங்கே நில் நாங்க போய் சாமிகும்பிட்டு வந்துடுறோம் என்றேன்.அவன் எதுக்கும் பேசாமல் நின்றன்.என்கூட வந்த நண்பர்கள் வேகமா வா நடை சாத்திட போறாங்க என்று அவசர படுத்தினார்கள். நான் அவனை பார்த்து என்னடா நீயும் வாரியா என்று கூப்பிட்டேன். அவன் அடுத்த வார்த்தை சொன்னான் நான் எப்ப வரல என்று சொன்னேன் என்றன். எனக்கு மனதில் ஒரு நெருடல் இருந்தாலும்.சரி என்று உள்ளே போக தயார் ஆனோம். அப்போது அவன் ஒரு யோசனை சொன்னான் யாரும் என்னை உள்ளே வந்து பெயர் சொல்லி கூப்பிட்டு விடாதிங்க யாராவது கேட்டா எதாவது பிரச்னை வந்தாலும் வரும் அதனால் யாரும் பெயர் சொல்லி மட்டும் கூப்பிட வேண்டாம் என்று அன்பு கட்டளை இட்டான். எப்பவும் போல் நங்கள் சாமி கும்பிட்டோம் அவனும் கும்பிட்டு திரினிரு (துன்னுறு) பூசிகிட்டு கோவில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு விட்டு திரும்பினோம். அதே போல் அவன் நோன்பு இருக்கும் போதுஎல்லாம் அவன்கூட நோன்பு கஞ்சி சாப்பிடுவோம் நாங்களும்.அவன் சொல்லுவான் கடவுள் எல்லாம் ஒன்னு தான் அண்ணா நாம தான் பிரிச்சு பாத்து சண்டை போட்டுகுறோம் என்று. நான் ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றல், இந்த நாக்கை அறுத்த நபர்களுக்கும் அந்த செய்தியை பார்த்து அத்தனை முஸ்லிம் நண்பர்களையும் திட்டிய நபர்களுக்கும் ஒரு உண்மையை உணர வைக்கவே இங்க இதை எழுதுகிறேன். பகவத்கீதையும் குரானும் எதிர் மதத்தின் மீது வெறுப்பை காட்ட சொல்லவில்லை. மாறாக எல்லா உயிர் மீதும் அன்பை மட்டுமே காட்ட சொல்லுகிறது. அதை செய்யாமல் மதம் மாற சொல்லுகிறார்கள் என்றல் அவர்கள் அந்த மதத்தை இன்னும் சரியாய் புரிந்துகொள்ளவில்லை என்றே அர்தம்.யாரையும் எந்த மதமும் பின்பற்ற சொல்லி கட்டாய படுத்தவில்லை.அதேபோல் இந்து தான் இந்து சாமியை கும்பிடனும், முஸ்லிம் தன் அல்லவை தொழுக வேண்டும் என்று எந்த மதமும் சொல்லவில்லை.கட்டாய படுத்தவும் இல்லை.பின்பு ஏன் இப்படி செய்கிறோம். சரி கிறிஸ்தவ மதத்தில் சொல்லுவது போல் தனக்கு திங்கு செய்பவரையும் மன்னிப்போம்.அவர்களையும் மன்னிப்போம். இனிமேல் இது மாதிரி நடக்காமல் இருக்க கடவுளை வேண்டிகொள்கிறேன்
பின் குறிப்பு : தூக்க நேரத்தில் எழுதியது தவறு இருந்தால் மன்னிக்கவும் 


Comments

  1. வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகியிருக்கும் உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நானும் என் பள்ளியும்.....

நான் படித்தது (படித்து கிழித்து) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மங்களநாடு. இந்த பள்ளி என் வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் இருக்கிறது.இந்த பதிவை எழுதும் போது என் இளமை காலம் என் கண் முன்னே வந்து செல்கிறது.நான் பள்ளிக்கு வெகு காலம் நடந்தே சென்றவன் அதனால் காலை எட்டு மணிக்கு எல்லாம் அயத்தம் ஆகிவிடுவேன்.அப்பொழுது என் அம்மா தான் என்னை பள்ளிக்கு கிளப்புவார்கள். அந்த சின்ன வயதில் என் அம்மா தலைவாருவதை என்னால் இன்றும் மறக்க முடியாது.இது மாதிரி எப்பவும் சீவனும் என்று சொல்வது என் மனதில் பசுமரத்து ஆணிபோல் பதிந்து போனது அதனால் தான் இன்றளவும் நான் தலைவருவதை அதே பாணியில் (style) தொடர்கிறேன் அம்மாவின் விருபத்திற்காக. இன்றளவும் வேறு மாதிரி தலைவருவாருவது (சீவியது) கிடையாது என் தலையை. இன்று நினைத்தாலும் எனக்கு சிரிப்பு தான் வருது அந்த பள்ளி காலங்கள்.ஆம் நான் பள்ளி செல்லும் காலத்தில் மாங்காய்,புளியங்காய்,நாவல் பழம், கொடுக்கபிலி என்று எதாவது ஓன்று    எங்கள் பைகளில் கண்டிப்பாக வந்து சேர்ந்துவிடும். இல்லை என்றாலும் சேர்த்துவிடுவார்கள் நண்பர்கள்.பள்ளியில் படிப்பதை தவிர அத்தனை சே

அதிசய மரம்

நான் விநாயகர் சதுர்த்தி அன்று கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலிலுள்ள பஞ்சமுக விநாயகரை தரிசிக்க போயிருந்தேன்.....அப்போது அங்கு ஒரு அதிசய மரத்தை பார்த்தேன்......அதன் பெயர் நாகலிங்க பூ மரம்.....ஆமாங்க நான் கிராமத்தில் பிறந்ததால் என்னட்ற்ற மரத்தினை பாத்து இருக்கிறேன் அனால் அது மாதிரியான ஒரு மரத்தை பாத்து இல்லை....நல்ல உயரமான மரம்....அதன் சிறப்பு என்னவென்றால் அது பூ பூப்பது மரத்தின் அடிபகுதில் தான்..... அது மட்டும் இல்லை....அந்த பூ ஓவொன்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது.....அதன் தனி சிறப்பு என்ன வென்றால்....ஒவ்வொரு பூவும் நாகபாம்பு சிவலிங்கத்தை சுற்றி இருப்பது போல் இருந்தது.....அது மட்டும் இல்லை ...ஒவ்வொரு பூவிலும் ஏதோ ஒரு தெய்விக மனம் வீசுவதை என்னால் உணர முடிந்தது ......அதன் முன்னே யாரும் மரத்தை தொடக்கூடாது என்று எழுதி வைத்து இருந்தார்கள்.....அதை படித்தபின்னும் .....ஏனோ தெரியவில்லை அதை தொட்டு பார்க்கவேணும் என்ற என்னம் உண்டானது எனக்கு...என்னையும் மீறி அதனை அருகில் உள்ள குச்சியை எடுத்து தொட்டு பார்த்தேன்.....நல்ல கடினமான காம்புடன் அந்த பூ இருந்தது.....சரி கையால் தொட்டு பார்க்கல