Skip to main content

அதிசய மரம்

நான் விநாயகர் சதுர்த்தி அன்று கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலிலுள்ள பஞ்சமுக விநாயகரை தரிசிக்க போயிருந்தேன்.....அப்போது அங்கு ஒரு அதிசய மரத்தை பார்த்தேன்......அதன் பெயர் நாகலிங்க பூ மரம்.....ஆமாங்க நான் கிராமத்தில் பிறந்ததால் என்னட்ற்ற மரத்தினை பாத்து இருக்கிறேன் அனால் அது மாதிரியான ஒரு மரத்தை பாத்து இல்லை....நல்ல உயரமான மரம்....அதன் சிறப்பு என்னவென்றால் அது பூ பூப்பது மரத்தின் அடிபகுதில் தான்..... அது மட்டும் இல்லை....அந்த பூ ஓவொன்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது.....அதன் தனி சிறப்பு என்ன வென்றால்....ஒவ்வொரு பூவும் நாகபாம்பு சிவலிங்கத்தை சுற்றி இருப்பது போல் இருந்தது.....அது மட்டும் இல்லை ...ஒவ்வொரு பூவிலும் ஏதோ ஒரு தெய்விக மனம் வீசுவதை என்னால் உணர முடிந்தது ......அதன் முன்னே யாரும் மரத்தை தொடக்கூடாது என்று எழுதி வைத்து இருந்தார்கள்.....அதை படித்தபின்னும் .....ஏனோ தெரியவில்லை அதை தொட்டு பார்க்கவேணும் என்ற என்னம் உண்டானது எனக்கு...என்னையும் மீறி அதனை அருகில் உள்ள குச்சியை எடுத்து தொட்டு பார்த்தேன்.....நல்ல கடினமான காம்புடன் அந்த பூ இருந்தது.....சரி கையால் தொட்டு பார்க்கலாம் என்ற என்னம் உண்டானது....நான் அந்த பூவை தொட்டது தான் தாமதம்....அந்த பூ உதிர்ந்து கிலே விழுந்து விட்டது....சரி இந்த பூதன் இப்படி என்று அடுத்த பூவை தொட்டேன் அதுக்கும் என் மேல் என்ன வெறுப்போ தெரியவில்லை உதிர்ந்து கிலே விழுந்து விட்டது....பின்பு அங்கு நின்ற பெரியவரிடம் கேட்டேன்....அப்போது தான் உண்மை தெரிந்தது மனிதன் கை பட்டாள் அந்த பூ உயிரை விட்டுவிடும் என்று.என்ன இயற்கை விந்தை...என்ன கடவுள் படைப்பு.....ஏனோ கடவுளின் பெயரை கொண்ண்ட அந்த பூ மரத்துக்கு மனிதன் மேல் இத்தனை வெறுப்பு.....கண்டிப்பாக கோவை வரும் அனைவரும் வந்து பார்க்கவேண்டிய மரம்....கண்டிப்பாக வந்து பார்த்து கோனியம்மன் அருளையும் ஆசியையும் பெற்று செல்வோமாக..........

 

அந்த  பூ உங்களுக்காக.........ஆனால் இந்த பூ வேறு வண்ணத்தில் உள்ளது...நான் பார்த்தது வெள்ளை நிறம்....



Comments

  1. வியப்பாக தான் உள்ளது... தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி! நீங்கள் கோவை வரும் போது மறக்காமல் வந்து பார்த்து செல்லுங்கள்......

      Delete

Post a Comment

Popular posts from this blog

மறுபடியும்

அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம்............... என்னால் இது நாள் வரை வலைப்பதிவு வந்து எழுத முடியவில்லை ஆனால் வந்து படிப்பது மட்டும் உண்டு.இன்று முதல் நான் என் வலை பக்கத்தில் எழுதலாம் என்று உத்தேசத்தில் உள்ளேன்.....என் வலைபக்கத்திற்கு உங்களின் ஆதரவை கொடுக்க வேண்டிகொள்கிறேன் இப்படிக்கு, அம்பாள்புரம் செந்தில்

எல்லா சாமியும் ஒன்னுதான்.....

நேற்று ஒரு செய்தியை முகநூலில் படிக்க நேர்ந்தது. ஒரு இந்து மாணவனை மதம் மாறசொல்லியதகவும் அவர் மாற மறுத்ததா காரணத்தால் அவனுக்கு நாக்கு அறுக்கபட்டதகவும் அந்த செய்தி இருந்தது அதற்கு பின்னுட்டங்களை பார்க்கும் பொது என் மனம் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தது. ஆம் அதற்கு பின்னுட்டம் போட்டவர்கள் அனைவரும் இந்து வெறியர்களா தான் இருக்க வேண்டும் அத்தனை கோபம் தெரிந்தது அதில்.கோபம் சரியானதுதான்.ஆனால் அதற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குறை சொல்வது எந்த விதத்தில் சரி. இதை எழுதும் நன் ஒரு இந்து என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.இங்கே தனிப்பட்ட முறையில் சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்.நான் ஒரு இந்து ஆனால் நான் படித்தது ஒரு கிறிஸ்தவ பள்ளிகூடத்தில் அதனால் எனக்கு பைபிள் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நன் நன்றாகவே கிறிஸ்தவ மதத்தை பற்றி தெரிந்தவன்.அதே போல் குரான் படிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை என்றலும் முஸ்லிம் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு அதிகமாகவே கிடைத்தது என்றே சொல்லலாம்.அவற்றில் ஒரு நட்பை மட்டும் இங்கு உதரணத்துக்கு சொல்ல கடமைப்பட்டு இருக்குறேன்.அவரின் பெயர் முகமது அகில் இம்ரான். அவர...

எனக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு.........

நான் வேலை பார்க்கும் ஹோட்டல் நட்சத்திர அந்தஸ்து பெற்றதால் அங்கு புத்தாண்டை கொண்டாட வரும் நபர்களை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. பணம் படைத்தவரின் கூட்டத்திற்கு அளவே இல்லை,அதேபோல் அவர்கள் செய்யும் அலும்புக்கும் குறைவிருக்காது.இளம் ஆண்களும்,இளம் பெண்களும் குடிபோதையில் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் அவர்கள் செய்த சேட்டையெல்லாம் இங்க சொல்லவே எனக்கு கஷ்டமா இருக்கு. இது மட்டும் இல்லை கர்ப்பணி பெண்களும் குடிபோதையில் ஆடியதை பார்க்கும் போது “கலிகாலம்” என்று என் பக்கத்து வீட்டு பாட்டி சொல்லுவதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.சரி இங்குதான் இப்படி வெளியில் போய் நிப்போம் என்று வெளியே வந்தேன்,அங்கே நடந்தது அதைவிட கொடுமை.அங்கு ஒரு போலீஸ்  குடித்துவிட்டு கூச்சல் போட்டு கொண்டு சாலையில் போகும் ஆண்களை எல்லாம் அடித்து விரட்டி கொண்டு இருந்தார்,அப்போது மூன்று இளம் பெண்கள்,ஒருவர் வண்டியை ஓட்டும் போது பின்னல் அமர்ந்து இருந்த இரண்டு பெண்களும் ஓடும் வண்டியில் எழுந்து நின்று(போலீஸ் மாமாவுக்கு ஒரு ஓ போடுங்க அப்படின்னுதான்) கூச்சல் போட்டவன்னம் கடந்து சென்றனர். அந்த போலீஸ்காரர் தலையில் அடித்துகொண்டர். அப...