Skip to main content

Posts

மறுபடியும்

அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம்............... என்னால் இது நாள் வரை வலைப்பதிவு வந்து எழுத முடியவில்லை ஆனால் வந்து படிப்பது மட்டும் உண்டு.இன்று முதல் நான் என் வலை பக்கத்தில் எழுதலாம் என்று உத்தேசத்தில் உள்ளேன்.....என் வலைபக்கத்திற்கு உங்களின் ஆதரவை கொடுக்க வேண்டிகொள்கிறேன் இப்படிக்கு, அம்பாள்புரம் செந்தில்
Recent posts

அதிசய மரம்

நான் விநாயகர் சதுர்த்தி அன்று கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலிலுள்ள பஞ்சமுக விநாயகரை தரிசிக்க போயிருந்தேன்.....அப்போது அங்கு ஒரு அதிசய மரத்தை பார்த்தேன்......அதன் பெயர் நாகலிங்க பூ மரம்.....ஆமாங்க நான் கிராமத்தில் பிறந்ததால் என்னட்ற்ற மரத்தினை பாத்து இருக்கிறேன் அனால் அது மாதிரியான ஒரு மரத்தை பாத்து இல்லை....நல்ல உயரமான மரம்....அதன் சிறப்பு என்னவென்றால் அது பூ பூப்பது மரத்தின் அடிபகுதில் தான்..... அது மட்டும் இல்லை....அந்த பூ ஓவொன்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது.....அதன் தனி சிறப்பு என்ன வென்றால்....ஒவ்வொரு பூவும் நாகபாம்பு சிவலிங்கத்தை சுற்றி இருப்பது போல் இருந்தது.....அது மட்டும் இல்லை ...ஒவ்வொரு பூவிலும் ஏதோ ஒரு தெய்விக மனம் வீசுவதை என்னால் உணர முடிந்தது ......அதன் முன்னே யாரும் மரத்தை தொடக்கூடாது என்று எழுதி வைத்து இருந்தார்கள்.....அதை படித்தபின்னும் .....ஏனோ தெரியவில்லை அதை தொட்டு பார்க்கவேணும் என்ற என்னம் உண்டானது எனக்கு...என்னையும் மீறி அதனை அருகில் உள்ள குச்சியை எடுத்து தொட்டு பார்த்தேன்.....நல்ல கடினமான காம்புடன் அந்த பூ இருந்தது.....சரி கையால் தொட்டு பார்க்கல

எல்லா சாமியும் ஒன்னுதான்.....

நேற்று ஒரு செய்தியை முகநூலில் படிக்க நேர்ந்தது. ஒரு இந்து மாணவனை மதம் மாறசொல்லியதகவும் அவர் மாற மறுத்ததா காரணத்தால் அவனுக்கு நாக்கு அறுக்கபட்டதகவும் அந்த செய்தி இருந்தது அதற்கு பின்னுட்டங்களை பார்க்கும் பொது என் மனம் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தது. ஆம் அதற்கு பின்னுட்டம் போட்டவர்கள் அனைவரும் இந்து வெறியர்களா தான் இருக்க வேண்டும் அத்தனை கோபம் தெரிந்தது அதில்.கோபம் சரியானதுதான்.ஆனால் அதற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குறை சொல்வது எந்த விதத்தில் சரி. இதை எழுதும் நன் ஒரு இந்து என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.இங்கே தனிப்பட்ட முறையில் சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்.நான் ஒரு இந்து ஆனால் நான் படித்தது ஒரு கிறிஸ்தவ பள்ளிகூடத்தில் அதனால் எனக்கு பைபிள் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நன் நன்றாகவே கிறிஸ்தவ மதத்தை பற்றி தெரிந்தவன்.அதே போல் குரான் படிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை என்றலும் முஸ்லிம் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு அதிகமாகவே கிடைத்தது என்றே சொல்லலாம்.அவற்றில் ஒரு நட்பை மட்டும் இங்கு உதரணத்துக்கு சொல்ல கடமைப்பட்டு இருக்குறேன்.அவரின் பெயர் முகமது அகில் இம்ரான். அவர

எனக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு.........

நான் வேலை பார்க்கும் ஹோட்டல் நட்சத்திர அந்தஸ்து பெற்றதால் அங்கு புத்தாண்டை கொண்டாட வரும் நபர்களை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. பணம் படைத்தவரின் கூட்டத்திற்கு அளவே இல்லை,அதேபோல் அவர்கள் செய்யும் அலும்புக்கும் குறைவிருக்காது.இளம் ஆண்களும்,இளம் பெண்களும் குடிபோதையில் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் அவர்கள் செய்த சேட்டையெல்லாம் இங்க சொல்லவே எனக்கு கஷ்டமா இருக்கு. இது மட்டும் இல்லை கர்ப்பணி பெண்களும் குடிபோதையில் ஆடியதை பார்க்கும் போது “கலிகாலம்” என்று என் பக்கத்து வீட்டு பாட்டி சொல்லுவதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.சரி இங்குதான் இப்படி வெளியில் போய் நிப்போம் என்று வெளியே வந்தேன்,அங்கே நடந்தது அதைவிட கொடுமை.அங்கு ஒரு போலீஸ்  குடித்துவிட்டு கூச்சல் போட்டு கொண்டு சாலையில் போகும் ஆண்களை எல்லாம் அடித்து விரட்டி கொண்டு இருந்தார்,அப்போது மூன்று இளம் பெண்கள்,ஒருவர் வண்டியை ஓட்டும் போது பின்னல் அமர்ந்து இருந்த இரண்டு பெண்களும் ஓடும் வண்டியில் எழுந்து நின்று(போலீஸ் மாமாவுக்கு ஒரு ஓ போடுங்க அப்படின்னுதான்) கூச்சல் போட்டவன்னம் கடந்து சென்றனர். அந்த போலீஸ்காரர் தலையில் அடித்துகொண்டர். அப்போது அந்

நானும் என் பள்ளியும்.....

நான் படித்தது (படித்து கிழித்து) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மங்களநாடு. இந்த பள்ளி என் வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் இருக்கிறது.இந்த பதிவை எழுதும் போது என் இளமை காலம் என் கண் முன்னே வந்து செல்கிறது.நான் பள்ளிக்கு வெகு காலம் நடந்தே சென்றவன் அதனால் காலை எட்டு மணிக்கு எல்லாம் அயத்தம் ஆகிவிடுவேன்.அப்பொழுது என் அம்மா தான் என்னை பள்ளிக்கு கிளப்புவார்கள். அந்த சின்ன வயதில் என் அம்மா தலைவாருவதை என்னால் இன்றும் மறக்க முடியாது.இது மாதிரி எப்பவும் சீவனும் என்று சொல்வது என் மனதில் பசுமரத்து ஆணிபோல் பதிந்து போனது அதனால் தான் இன்றளவும் நான் தலைவருவதை அதே பாணியில் (style) தொடர்கிறேன் அம்மாவின் விருபத்திற்காக. இன்றளவும் வேறு மாதிரி தலைவருவாருவது (சீவியது) கிடையாது என் தலையை. இன்று நினைத்தாலும் எனக்கு சிரிப்பு தான் வருது அந்த பள்ளி காலங்கள்.ஆம் நான் பள்ளி செல்லும் காலத்தில் மாங்காய்,புளியங்காய்,நாவல் பழம், கொடுக்கபிலி என்று எதாவது ஓன்று    எங்கள் பைகளில் கண்டிப்பாக வந்து சேர்ந்துவிடும். இல்லை என்றாலும் சேர்த்துவிடுவார்கள் நண்பர்கள்.பள்ளியில் படிப்பதை தவிர அத்தனை சே